சென்னை : கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்து வரும் ரொனால்டோ தற்போது டிஜிட்டல் உலகிலும் புதிய சாதனையை படைத்துள்ளார்.ரோனல்
உலகில் முக்கிய மற்றும் மிகப் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர் பல முன்னணி கிளப்பிற்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் சவுதி அரேபியா கால்பந்து லீகில் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்போதுமே தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்ளும் விளையாட்டு வீரர்களுள் ஒருவர் ஆவார். இவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சமூக வலைதளங்களில் பெரிதளவு பேசும் பொருளாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதன்படி நேற்று இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ஒரு பதிவிட்டார். அந்தப் பதிவில் தான் ஒரு புதிய யூட்யூப் சேனல் உருவாக்கி இருப்பதாக அறிவித்தார்.
அவர் அறிவித்த சில நிமிடங்களில் சுமார் 2.78 மில்லியன் யூடியூப் பயனர்கள் அவரது சேனலை சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். அதன்பிறகு அந்த சேனலில் ரொனால்டோ தொடர்ந்து11 ஷார்ட் வீடியோக்களை வெளியிட்டார். அந்த வீடியோக்கள் அனைத்தும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அரட்டை அடிக்கவும் வீடியோவாக அமைந்திருந்தது.
மேலும், அந்த யூடியூப் சேனலில் ரொனால்டோ கால்பந்து குறித்து வீடியோக்களை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் ரொனால்டோ கால்பந்திலிருந்து ஓய்வை அறிவிப்பார் என்று ரசிகர்களால் கருதப்படுகிறது.
மேலும் இந்த யூ-டியூப் சேனல் தொடங்கிய 1 மணி நேரத்தில் R. Cristiano சேனலை 4 மில்லியன் பயனர்கள் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதனால், யூட்யூபில் குறைவான நேரத்தில் அதிக சப்ஸ்க்ரைபர்களை உருவாக்கியவர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.
மேலும், இவர் ஏற்கனவே எக்ஸ் தளத்தில் 112.5 மில்லியன் ஃபாலோயர்களும், ஃபேஸ்புக்கில் 170 மில்லியன் ஃபாலோயர்களும், இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். இதை விட ஆச்சர்யம் அடையும் விஷயம் என்னவென்றால் ரொனால்டோ பதிவிடும் ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இந்திய மதிப்பில் ரூ.26.7 கோடி வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…