இந்தியாவுக்கு 3வது தங்கத்தை பெற்று கொடுத்த பளுதூக்கும் வீரர்.!
காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தின் பர்மிங் ஹாம் நகரில் காமன்வெல்த் (commonwealth games 2022) போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில், வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்திய வீரர்கள் பளு தூக்குதல் போட்டியில் அசதி வருகின்றனர். ஆடவருக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார்.
பளு தூக்குதல் போட்டியில் 19 வயதான அச்சிந்தா ஷூலி ஸ்னாட்ச் பிரிவில் இரண்டாவது வாய்ப்பில் 143 கிலோ எடை தூக்கி மிரள வைத்தார். இதேபோன்று, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 170 கிலோ எடை தூக்கி வியக்க வைத்தார். இதன் மூலம் இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 313 கிலோ எடையை தூக்கி, தங்கப் பதக்கத்தை வென்றார்.
காமன்வெல்த் போட்டியில் ஏற்கனவே மீராபாய் சானு, ஜெரேமி தங்கம் வென்றுள்ள நிலையில், பளு தூக்குதலில் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவுக்கு 3வது தங்கம் பெற்றுக்கொடுத்த அச்சிந்தா ஷூலிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.