கூட்டத்திற்காக விளையாடாமல் நாட்டிற்காக விளையாண்ட நாயகனின் 39-ம் பிறந்தநாள்.. வாழ்த்தும் ரசிகர்கள், பிரபலங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார்.
கூகுளில் “Dhoni” என தேடுனாலே அவர் படைத்த சாதனைகளை பற்றியே வரும். மேலும், ரசிகர்கள் தோனியை “கேப்டன் கூல்” என அழைத்து வந்தனர். அதற்க்கு காரணம், எந்தொரு கடினமான சூழலிலும் அவர் கோபப்படமாட்டார். அவ்வாறு கோபப்பட்டால், தனது கோபத்தை வீரர்களிடம் காட்டமாட்டார் என்பதே.
2007 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை தொடர் நடந்தது. அந்த போட்டியில் சீனியர் வீரர்கள் யாருமே இல்லை. தோனி தலைமையில் உள்ள இளம் வீரர்களை பிசிசிஐ அனுப்பியது. அனால் அந்த ஆண்டு, உலகக்கோப்பையுடன் தோனி இந்தியா திரும்பினார். இது, அவரின் பெரிய சாதனையாகும்.
அதற்கடுத்த, 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் தோனி-கம்பிர் இணைந்து அடித்த ரன்களால் அந்தாண்டு உலகக்கோப்பையை கைப்பற்ற முடிந்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில், ரசிகர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தார்.
இந்தியா-நியூஸிலாந்து இடையே நடந்த அந்த போட்டியில் தோனி ரன்-அவுட் ஆனார். அந்த நிகழ்வு, ரசிகர்கள் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. மேலும், அந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி கோப்பையுடன், தல தோனியை தோளில் வைத்து, மைதானத்தை சுற்றி வருவார்கள் என நினைத்த பல கோடி மக்களின் கனவு, கனவாகவே கலைந்தது. அதன்பிறகு, அவர் எந்தொரு போட்டிகளிலும் கலந்துகொள்ளவில்லை.
சர்வதேச போட்டிகளை தவிர்த்து, உலகளவில் ரசிகர்களை கொண்ட இந்தியாவில் ஆண்டுதவறாது நடைபெறும் ஐபிஎல் தொடரிழும் பல சாதனைகளை படைத்தார். இவர் தலைமை தாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும், ஜார்கண்ட் மாநிலம், ரஞ்சியின் பிறந்தாலும், தமிழ்நாடால் கொண்டாடப்படும் “தல” ஆவார். அதற்க்கு காரணம், தமிழக மக்கள் அவருக்கு அளித்த ஆதரவே ஆகும்.
மேலும், தோனியை மக்கள் செல்லமாக “தல” என்று அழைத்து வருகின்றனர். மேலும், நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிக்காக தல தோனி காத்திருந்த நிலையில், உலககெங்கும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தனை சாதனைகளை படைத்த தல தோனி, இன்று தனது 39 ஆம் பிறந்தநாளை கொண்டாடுகிறார். தோனியின் பிறந்தநாளுக்கு அவரின் ரசிகர்கள், பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.