3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 39 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி .!

Published by
Dinasuvadu desk
  • இன்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.
  • நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 39 ரன்கள் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியானது வெல்லிங்கடனில் நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்தது.

பின் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி நேற்றைய 2-ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 51 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

Image

இன்றைய 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே பும்ரா வீசிய பந்தில் வாட்லிங் வெளியேற பின் வந்த சவுதி 6 ரன்களில் அவுட் ஆனார். இதையெடுத்து கிராண்ட்ஹோமுடன் ஜோடி சேர்ந்த ஜேமிசன் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.சிறப்பாக விளையாடிய ஜேமிசன் 44 ரன்களும் , கிராண்ட்ஹோமும் 43 ரன்களும் அடித்தனர்.

பின்னர் ட்ரெண்ட் போல்ட் கடைசி நேரத்தில் அதிரடி காட்ட நியூசிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால்  இந்தியாவை விட 183 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து இருந்தது.இதையெடுத்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது இந்திய அணி.

முதல் இன்னிங்க்ஸை போல பிருத்வி ஷா ,புஜாரா சொற்ப ரன்களில் வெளியேறினர்.பின்னர் நிதானமாக விளையாடி மாயங்க் அகர்வால் அரைசதம் அடித்து 58 ரன்னில் வாட்லிங்கிடம் கேட்சை கொடுத்தார்.பின்னர் கேப்டன் கோலி 19 ரன்னில் நடையை கட்டினார்.

இந்நிலையில்  இன்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஹனுமா விஹாரி(15) , ரஹானே (25) ரன்களுடன் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணியை விட இந்திய அணி 39 ரன்கள் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Dinasuvadu desk
Tags: #INDvsNZ

Recent Posts

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

26 minutes ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

14 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

15 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

16 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

18 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

18 hours ago