3 ஆண்டுகள் கழித்து டி 20 அணியில் இடம் பெற்ற நட்சத்திர வீரர்…!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் செய்து இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மூன்று டி20 தொடரில் விளையாட உள்ளன. ஆஸ்திரேலிய அணியுடன் , இலங்கை இந்த மாதம் 27, 30 மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் விளையாட உள்ளனர்.
இதை தொடர்ந்து நவம்பர் 3 , 5 மற்றும் 8-ம் தேதிகளில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளனர்.இந்த இரு தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் உலகக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் கேப்டன் ஸ்மித்தை சேர்க்கப்பட்டு உள்ளார்.
ஸ்மித் கடைசியாக 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மொஹாலியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். அதன் பின் ஸ்மித் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆஸ்திரேலிய டி20 போட்டியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன் ) ,ஆஷ்டன் அகர் ,அலெக்ஸ் கேரி ,பாட் கம்மின்ஸ் ,க்ளென் மேக்ஸ்வெல்,பென் மெக்டெர்மொட் ,கேன் ரிச்சர்ட்சன் ,ஸ்டீவ் ஸ்மித் ,பில்லி ஸ்டான்லேக் ,மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர் ,ஆண்ட்ரூ டை ,டேவிட் வார்னர் ,ஆடம் சம்பா
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025