அர்ஜென்டினா அணிக்கு 2-வது வெற்றி! காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அபாரம்!!

கோப்பா அமெரிக்கா: நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரில் இன்றைய போட்டியில் அர்ஜென்டினா அணியும், சிலி அணியும் மோதியது.
இந்த ஆண்டின் கோப்பா அமெரிக்கா தொடரின் ‘A’ பிரிவில் இருக்கும் அணிகளான அர்ஜென்டினா அணியும், சிலி அணியும் இன்று காலை மோதியது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் முதல் பாதியில் 34’வது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறிவிடும்.
அதன் பின் 3 நிமிடங்கள் கூடுதல் நிமிடம் கொடுத்து முதல் பாதி நிறைவு பெற்றது. முதல் பாதியில் 0-0 என சமநிலையில் முடிவடைந்தது. அதன்பிறகு இரண்டாம் பாதியானது தொடங்கியது.
இந்த 2-ஆம் பாதியில் இரண்டு அணிகளுமே கோலை அடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் இரு அணிகளும் தீவீர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சரியாக 88-வது நிமிடத்தில் கிடைத்த ஒரு அருமையான கார்னரை மெஸ்ஸி சரியாக பயன்படுத்துவார்.
அந்த பந்தை மெஸ்ஸி லாட்டாரோ மார்டினெஸ்ஸிடம் அடிப்பார் அதை அவர் சரியாக கோலுக்கு அடிப்பார் இதன் மூலம் அர்ஜென்டினா அணி 1-0 என முன்னிலை பெற்றது. மேலும் 90 நிமிடங்கள் முடிந்தும் கூடுதலாக 4 நிமிடங்கள் கொடுக்கப்படும்.
ஆனால், அதில் அதிகமாக அர்ஜென்டினா அணியே ஆதிக்கம் செலுத்தினார்கள். இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என அர்ஜென்டினா அணி போட்டியை வென்றதுடன் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025