#INDvsSA : ஒரே நாளில் 23 விக்கெட்! 122 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை!
தென்னாப்பிரிக்கா இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வந்த நிலையில், 23.2 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து.
INDVSSA: பந்துவீச்சில் வெறித்தனம் காட்டிய சிராஜ்! ஆல்-அவுட் ஆன தென்னாப்பிரிக்கா
அடுத்ததாக தென்னாப்பிரிக்கா அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை நேற்று தொடங்கியது. நேற்றய நேரம் முடிவில் 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 36 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்று தென்னாப்பிரிக்கா அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்குகிறது.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே இரு அணிகளிலும் 23 விக்கெட்டுகள் விழுந்து 122 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 122 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகளை இழந்த 2-வது போட்டியாக இந்தியா, தென்னாப்பிக்கா டெஸ்ட் போட்டி மாறியது.
மேலும், இந்த போட்டிக்கு முன்னதாக 1902 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான முதல் நாள் டெஸ்ட் போட்டியில் 25 விக்கெட்டுகள் |விழுந்தன. அதனை தொடர்ந்து நேற்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மோதிய போட்டியில் 23 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.