கால்பந்து உலகில் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பலோன் டி’ஓர் விருதானது, கால்பந்து விளையாட்டில் ஒவ்வொரு ஆண்டு சிறப்பாக செயல்படும் வீரர்கள், அணிகளுக்கு வழங்கபடுகிறது. இந்த விருதானது பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல இந்தாண்டும் கால்பந்து உலகில் சிறந்த வீரர்களுக்கு பலோன் டி’ஓர் விருதுகளை பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்குக்கான பலோன் டி’ஓர் விருது , அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. கடைசியாக நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியை சிறப்பாக வழிநடத்தி உலகக்கோப்பையை வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 வீரர்கள் அரைசதம் விளாசல்.. ஆப்கானிஸ்தான் அபார வெற்றி..!
இதற்கு முன்னதாக, கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸிக்கு இதே பலோன் டி’ஓர் விருதானது , கடந்த 2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 என 7 முறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 8வது முறையாக பலோன் டி’ஓர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே பலோன் டி’ஓர் விருதுக்கு அதிக முறை பரிந்துரை செய்யப்பட்டவர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல பெண்களுக்கான சிறந்த கால்ப்பந்தாட்ட வீராங்கனைக்கான பலோன் டி’ஓர் விருதை ஸ்பெயின் வீராங்கனை ஐடனா பொன்மாடிக்கு வழங்ப்பட்டது. சிறந்த கோல்கீப்பருக்கான விருது அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணி கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸுக்கு வழங்ப்பட்டது.
சிறந்த இளம் கால்பந்காட்ட வீரருக்கான விருது இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி வீரர் ஜுட் பெல்லிங்ஹாமுக்கு வழங்கப்பட்டது. அதே போல இந்தாண்டு அதிக கோல் அடித்தவர் என்ற விருது நார்வே வீரர் எர்லிங் ஹோலந்த்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆண்கள் கிளப்புக்கான விருது மான்சிஸ்டர் சிட்டி அணிக்கும், சிறந்த பெண்கள் கால்பந்தாட்ட கிளப் அணிக்கான விருது பார்சிலோனா அணிக்கும் வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…