உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்வியை தாங்கமுடியாமல் இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள பங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூர் ஆகிய இடங்களில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மேற்கு வங்கத்தில் உள்ள பங்குராவின் பெலியத்தோர் காவல் நிலையப் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே ராகுல் லோகர் (23) என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தன. ராகுலின் உறவினர் ஒருவர் கூறுகையில், அவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்வதாகவும், இறுதிப் போட்டியைக் காண ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்ததாகவும் கூறினார்.
அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததைக் கண்டு வருத்தமடைந்து தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். அதே நேரத்தில், ஒடிசாவின் ஜாஜ்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு போட்டி முடிந்தவுடன் பிஞ்சர்பூர் பகுதியில் உள்ள தேவ் ரஞ்சன் தாஸ் என்ற 23 வயது இளைஞர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்துகொண்டார்.
தாஸின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘மனநிலை தொடர்பான சிகிச்சை பெற்று வந்ததாகவும், இறுதிபோட்டியில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து தாஸ் மிகவும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…