162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா..! ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா ..! 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டை இழந்து 497 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா என் 212 ரன்களும் , ரஹானே 115 ரன்களும் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளையும் , ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்கா அணி 5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது.
இதை தொடர்ந்து இன்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தனர். இதில் ஹம்சா 62 , பவுமா 32 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இந்திய அணி சார்பில் உமேஷ் 3 விக்கெட்டுகளையும் , முகமது சமி ,நதீம் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனால் இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்தது.இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. குவின்டன் டி காக் , கிளாசென் தலா 5 ரன்னும் , ஹம்சா , பவுமா இருவரும் ரன்கள் எடுக்காமல் வெளியேறினர். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டை இழந்து 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.இந்திய அணி சார்பில் ஷமி 3 , உமேஷ் யாதவ் 2 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025