தமிழக எம்.பி.க்கள் 6 பேர் உட்பட 14 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!

Lok saba

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி வரும் 22–ம் தேதிவரை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தனர். அதேபோல நாடாளுமன்ற வெளியே ஒரு பெண் உட்பட  இருவர் வண்ண புகை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து வியாழக்கிழமை (டிசம்பர் 14) மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் அமளியை ஏற்படுத்தி பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதற்கிடையில், லோக்சபா சபாநாயகர் காங்கிரஸ் உறுப்பினர்கள் டிஎன் பிரதாபன், ஹிபி ஈடன், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டீன் குரியகோஸ் ஆகியோரை குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய காலத்திற்கு இடைநீக்கம் செய்தார்.

அதன் பிறகும் அமளி நிற்காததால் மேலும் 9 உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் பென்னி பெஹனன் (காங்கிரஸ்), முகமது ஜாவேத் (காங்கிரஸ்), பி.ஆர்.நடராஜன் (சிபிஐஎம்), கனிமொழி (திமுக), விகே ஸ்ரீகண்டன் (காங்கிரஸ்), கே சுப்ரமணியம், எஸ்ஆர் பார்த்திபன் (திமுக), எஸ் வெங்கடேசன் (சிபிஐஎம்) மற்றும் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) ஆகியோர் அடங்குவர்.

லோக்சபா உறுப்பினர்களின் பாதுகாப்பில் நேற்று முன்தினம் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம், இந்த விவகாரத்தில் எந்த உறுப்பினரிடமும் அரசியலை எதிர்பார்க்கவில்லை, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுபோன்ற பாதுகாப்புக் குளறுபடி சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. அப்போதைய மக்களவைத் தலைவர்களின் அறிவுறுத்தலின்படியே அவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அறிவுறுத்தலின் பேரில் இது குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவையில் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்