களத்தில் வெறித்தனமான ஆட்டம்..!2 ஆண்டு இடைவெளி..இறுதிப்போட்டியில் சானியா
- இறுதிப்போட்டி நுழைந்தார்கள் சானிய மிர்சா மற்றும் கிச்செனோக் ஜோடி
- ‘well come back’ சானியா என்று ரசிகர்கள் ஆரவாரம்
இந்தியாவின் டென்னிஸ் உலகின் முடிசூடா அரசியாக திகழ்பவர் தான் இந்திய டென்னிஸ் விராங்கனை சானியாமிர்சா.ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகின்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
இந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்சா மற்றும் உக்ரைன் நாட்டின் நடியா கிச்செனோக் உடன் ஜோடி சேர்ந்து ஸ்லோவேனியாவின் ஜிதான்செக், செக் குடியரசின் பவுஸ்கோவா ஜோடியுடன் மோதியது. முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் சானியா ஜோடி போராடி வென்றது. இரண்டாவது செட்டில் அசுரத்தனமாக விளையாடிய சானியா ஜோடி 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
குழந்தை பெற்றெடுத்து இரண்டு ஆண்டு காலமாக விளையாட்டில் இருந்து ஓய்வில் இருந்த சானியா மிர்சா அதே பலத்துடன் மீண்டும் களத்தில் களமிறங்கி விளையாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் 33 வயதான போதும் களத்தில் அனல்பறக்க விளையாடியதை அனைவரும் ரசித்து மிர்சாவுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து குவித்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தரவரிசை பட்டியலில் முன்னணியில் இருக்கும் சீனாவின் சங் மற்றும் பெங் ஜோடியை சானியா மிர்சா மற்றும் கிச்செனோக் ஜோடி எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.