உலக கிரிக்கெட்டின் எதிர்கால ஜாம்பவான்கள்:
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் உலக கிரிக்கெட்டில் வருங்கால ஜாம்பவான்களாக மாறக்கூடிய இரண்டு இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதாவது ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோவில், உசேன் தான் தேர்ந்தெடுத்த இளம் கிரிக்கெட் வீரரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அதில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் எதிர்கால நட்சத்திரங்களாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளனர் என்று நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் தேர்வு செய்ததற்கான காரணம் 3 வடிவங்களிலும் சிறப்பான வீரர். சமீப காலம் தவிர இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி உள்ளார். உலக கோப்பை முன்னதாக உடல்நிலை குறை காரணமாக அவர் ஒரு படி பின்வாங்கினார். இருப்பினும் அடுத்த ஆண்டு அவரிடம் இருந்து இன்னும் நல்ல இன்னிங்ஸ் வரும் என்று கூறினார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த காலண்டர் ஆண்டில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் பல ஆண்டுகளாக அவர் இந்தியாவின் அடுத்த பரபரப்பாக இருக்கப் போகிறார் என தெரிவித்தார்.
சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக ரச்சின் ரவீந்திரா உருவெடுத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பை போன்ற மெகா போட்டியில் முதல்முறையாக எல்லோராலும் அற்புதமாக விளையாடுவது சாத்தியம் இல்லை. ஆனால் ரச்சன் ரவீந்திரன் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை நிரூபித்தார். இங்கிலாந்திலும் சிறப்பாக செயல்பட்டார். கீழ் வரிசையில் வந்து முக்கியமான இன்னிங்ஸில் விளையாடி சிறப்பாக செயல்பட்டார். இந்த பாணியை வெளிப்படுத்தினால் அவர் நிச்சயமாக மற்றொரு புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக மாறுவார் என தெரிவித்தார்.
இந்த ஆண்டு சுப்மன் கில் விளையாட்டு:
இந்த ஆண்டு 47 சர்வதேச போட்டிகளில் சுப்மன் கில் 48.31 சராசரியில் 2,126 ரன்கள் எடுத்தார். இதில் ஏழு சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் அடங்கும். இந்த ஆண்டு 6 டெஸ்டில் ஒரு சதத்துடன் 28.66 சராசரியில் 258 ரன்கள் எடுத்தார். அவரது சிறந்த ஸ்கோர் 128 ஆகும். 29 ஒருநாள் போட்டிகளில், கில் 1,584 ரன்களை சராசரியாக 63.36 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 105க்கு மேல் எடுத்தார். இந்த நேரத்தில் அவர் ஐந்து சதங்கள் மற்றும் ஒன்பது அரைசதங்களையும் அடித்தார். அவரது சிறந்த ஸ்கோர் 208 ஆகும்.
சுப்மன் கில் டி20யில் 2023ஆம் ஆண்டு சரியாகப் போகவில்லை. 13 இன்னிங்ஸ்களில் 26 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 312 ரன்கள் எடுத்தார். ஆட்டமிழக்காமல் 126 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோர் ஆகும்.
இந்த ஆண்டு ரச்சின் ரவீந்திரா விளையாட்டு:
உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் 106.44 என்ற சராசரியில் 578 ரன்களுடன் நான்காவது அதிக ரன் எடுத்தவர். இதன் போது அவர் மூன்று சதங்களையும் இரண்டு அரைசதங்களையும் அடித்தார். இந்த ஆண்டு 37 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 36.44 சராசரியில் 911 ரன்கள் குவித்துள்ளார். 110க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடித்தார். இந்த காலகட்டத்தில் அவர் மூன்று சதங்கள் மற்றும் மூன்று அரைசதங்களையும் அடித்தார். ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோர் ஆகும். இந்த ஆண்டு அனைத்து வடிவங்களிலும் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…