நடுவரின் முடிவை அவமதித்ததால் சுப்மான் கில்லுக்கு அபராதம்.!

- சுப்மான் கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தார்.
- நடுவர் ரங்கநாதன் சுப்மான் கில்லின் போட்டி கட்டணத்தில் இருந்து முழுவதையும் அபராதமாகவிதிப்பதாக கூறினார்.
இந்தியாவில் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் நடைபெற்ற பஞ்சாப்,டெல்லி அணிகள் இடையிலான லீக் போட்டியின் போது பஞ்சாப் அணி வீரர் சுப்மான் கில் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததால் நடுவர் சுப்மான் கில் “அவுட்”என அறிவித்தார்.
ஆனால் சுப்மால் கில் பந்து பேட்டில் படவில்லை என நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்தை விட்டு வெளியேற மறுத்தார்.பின்னர் லெக் அம்பயருடன் நடத்திய ஆலோசனைக்கு பின் சுப்மான் கில் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது .
இதனால் டெல்லி அணி விளையாடாமல் மைதானத்தை விட்டு வெளியேறுவதாக கூறியதால் 10 நிமிடங்கள் போட்டி பாதிக்கப்பட்டது. இந்திய அணிக்காக விளையாடிய சுப்மான் கில் நடுவரின் முடிவை அவமதித்ததால் அவர் மீது பெரும் விமர்சனம் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ரங்கநாதன் சுப்மான் கில்லின் போட்டி கட்டணத்தில் இருந்து முழுவதையும் அபராதமாக விதிப்பதாக கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025