தனது வீரியத்தை ஒலிம்பிக்கிலும் காட்டிய கொரோனா வைரஸ்..! ஒலிம்பிக் தகுதிப்போட்டிகள் ரத்து.!

சீனாவை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ்
தீவிரமாக பரவி வருவதால் அந்நாட்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுறுசுறுப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டில் இந்தாண்டு வரும் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக துவங்கி நடைபெற உள்ளன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றது.
இந்நிலையில் சீனாவில் வூகான் பகுதியில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அங்கு நடைபெறயிருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று பெண்கள் கால்பந்து போட்டிகள் நான்ஜிங் என்கிற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போல அங்கு நடைபெற இருந்த குத்துச் சண்டை போட்டியும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது இதற்கான ரத்து உத்தரவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025