டோக்கியோ ஒலிம்பிக்,டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கி,தற்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சுதிர்தா முகர்ஜி,ஸ்வீடனைச் சேர்ந்த லிண்டா பெர்க்ஸ்ட்ராமை எதிர்கொண்டார்.
வெற்றி:
இதனையடுத்து,பெர்க்ஸ்ட்ரோம் 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இதனால்,முதல் ரவுண்டில் 11-5 என்ற கணக்கில் சுதிர்தா ஆட்டத்தை இழந்தார்.அதன்பின்னர்,ஆட்டத்தை கைப்பற்ற முயற்சித்தார்.
இந்நிலையில்,சுதிர்தா 5-11, 11-9, 10-12, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் பெர்க்ஸ்ட்ராமை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.மேலும்,தற்போது இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனால்,பலரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.
சுதிர்தா முகர்ஜி:
மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுதிர்தா முகர்ஜி தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார், மேலும் 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
தோஹாவில் நடந்த ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றி பெற்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…