உலகில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறையாத நிலையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் வரும் ஜூலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் இந்த கொரோனா பெருந்தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் டென்னிஸ் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ இணைந்து ஜூலை 13ம் தேதி வரை அனைத்து வித போட்டிகளையும் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஏப்ரலில் அறிவித்தன. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பான (ஐடிஏ) வரும் ஜூலை 31 தேதி வரையிலான அனைத்து வித டென்னிஸ் போட்டிகளும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஏடிபி தலைவர் கவுடென்சி கூறியதாவது, ‘ தற்போதைய சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ள போட்டிகள் மீண்டும் பாதுகாப்பாக நடத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்’ என்று கூறியுள்ளார். மேலும் ஜூலை மாதம் நடைபெற இருந்த நான்கு மகளிர் டென்னிஸ் தொடர்களும் தள்ளி வைக்கப்பட்டள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ரோஜர் கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இல்லாமல் விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். இதற்காக அரசுகளிடம் பயிற்சி போட்டிகள் நடத்த அனுமதி கேட்டுள்ளோம் என்று போட்டி டென்னிஸ் அமைப்பாளர்கள் தரப்பில் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…