உலக டூர் இறுதிப் போட்டி:வெள்ளிக்கோப்பை வென்ற பி.வி.சிந்து!
இந்தோனேசியா:இன்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிக்கோப்பை வென்றுள்ளார்.
உலக பேட்மிண்டன் தரவரிசையில் ‘முதல் -8’ இடத்தில் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே மோதும் உலக பேட்மிண்டன் டூர் போட்டி (World Tour Finals) இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்,நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் உலக டூர் அரையிறுதியில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, உலகின் நம்பர் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமாகுச்சியை பரபரப்பான ஆட்டத்தில் 21-15 15-21 21-19 என்ற கணக்கில் சிந்து தோற்கடித்தார். அதன்படி,இப்போட்டியை கடுமையாகப் போராடி வென்றதன் மூலம் பி.வி.சிந்து,உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நுழைந்தார்.
இதனைத் தொடர்ந்து,இந்தோனேசியாவின் பாலியில் இன்று நடைபெற பேட்மிண்டன் உலக டூர் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,உலக நம்பர் 6 மற்றும் தென்கொரிய வீராங்கனையான அன் சியோங்கை எதிர்கொண்டார்.இப்போட்டியில்,சிந்து சியோங்கை வீழ்த்தி பட்டம் வெல்வாரா? என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில்,தென் கொரியாவின் அன் சே-யங்கிற்கு எதிராக பிவி சிந்து 16-21 12-21 என்ற நேர்செட் கணக்கில் போராடி தோல்வியடைந்துள்ளார் .இதனால்,உலக டூர் இறுதி போட்டியில் பிவி சிந்து தங்க கோப்பை வாய்ப்பை இழந்து,வெள்ளி கோப்பையை வென்றுள்ளார்.
. @Pvsindhu1 ends her campaign at the #BWFWorldTourFinals2021 as runner up ????
The loss is surely heartbreaking but #PVSindhu will take great positives from the tournament especially the way she played the SF ahead of the #WorldChampionships2021.
Comeback stronger ????#Badminton pic.twitter.com/jJl9rdT32P
— BAI Media (@BAI_Media) December 5, 2021