,

25 ஓவரில் இத்தனை ரன்களா..? ‘டெஸ்ட்’ கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை வீரர்.!

By

இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு குமார ( Lahiru Kumara) டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் மோசமான வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியை சேர்ந்த 26 வயதான வேக பந்துவீச்சாளர் லஹிரு குமார 25 ஓவர்கள் பந்து வீசி 164 ரன்கள் கொடுத்துள்ளார். 1 ஓவர்கள் மட்டும் மேடைன் கொடுத்து ஒரு விக்கெட் கூட அவர் எடுக்கவில்லை.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 25 ஓவர்கள் பந்து வீசி 164 ரன்கள்  கொடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை லஹிரு குமார படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக இதே இலங்கை அணியை சேர்ந்த கசுன் ராஜித என்பவர் 34 ஓவர்கள் பந்துவீசி 144 ரன்கள் கொடுத்திருந்தார். தற்போது அவருடைய சாதனையை லஹிரு குமார முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023