பனிப்பொழிவால் பாதித்த போக்குவரத்து – திணறும் திம்பம்

பனிப்பொழிவால் பாதித்த போக்குவரத்து – திணறும் திம்பம்

Default Image

திண்டுக்கல் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

இம்மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலையில் திம்பம் மலைப் பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Join our channel google news Youtube