இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் பேசிய மன்னார்குடி தொகுதி திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி ஒன்றியம், வடபாதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர்  அனுமதி பெற்று அதிக அளவு பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதனைதொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவங்கப்படுவதுடன், 1200 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கேள்வி விவாதத்தில் தெரிவித்தார்.        

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்