,

எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’ திரைப்பட ட்விட்டர் விமர்சனம்.!

By

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இந்த திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். ராதா மோகன் தனது படங்களுக்கு தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

bommai review
bommai review [Image source : file image]

ஒரு பயனர், பொம்மை படம் சிறப்பாக உள்ளது என்றார். எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கரின் நடிப்பு, ராதா மோகனின் இயக்கம், யுவனின் இசை என அனைத்தும் சிறப்பாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

அதையடுத்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படம் குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, இப்படம் ரசிகர்களுடன் இணைந்தால் 96, திருச்சிற்றம்பலம் போன்ற மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Dinasuvadu Media @2023