அயலான் படத்தை தொடர்ந்து மீண்டும் ரவிக்குமாருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

அயலான் படத்தை தொடர்ந்து மீண்டும் ரவிக்குமாருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

ravikumar sivakarthikeyan

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். 

அயலான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ரவிக்குமார் இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதனை வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் சினிமாவை மிரள வைத்த சிவகார்த்திகேயன்!! கண்ணை கவரும் ‘அயலான்’ ஏலியன்கள்…

படத்திற்கான டிரைலரும் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படத்திற்கான சிஜி வேலைகள் முடியாமல் இருந்த நிலையில், ஒரு வழியாக சிஜி வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மீண்டும் இணையும் அயலான் டீம்

அயலான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து ஒரு திரைப்படம் செய்யவிருந்தார்களாம். பிறகு அயலான் படமே முடியாத காரணத்தால் அந்த திட்டம் அப்படியே இருப்பதாகவும் அயலான் படம் வெளியான பிறகு கண்டிப்பாக அந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மனம் திறந்த ரவிக்குமார்

சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் படம் செய்வது குறித்து இயக்குனர் ரவிக்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ”  நானும் சிவகார்த்திகேயனும் அயலான் படத்திற்கு பிறகு ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற இருந்தோம். ஆனால், அயலான் படம் முடிய தாமதமான காரணத்தால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை.

நான் சிவகார்த்திகேயனிடம் பல கதைகளை கூறி இருக்கிறேன். ஒரு கதையை தயார் செய்துவிட்டு அதனை சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பேன். தற்போது அயலான் படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வெளியான பிறகு நானும் சிவகார்த்திகேயனும் இணைந்து செய்யக்கூடிய அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும்” என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube