சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே – போலீசார்..?

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே – போலீசார்..?

Default Image

நேற்று நட்சத்திர ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இரண்டு பேர் கொண்ட மருத்துவ குழு சித்ராவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அவரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சித்ரா மரணம் தற்கொலையே என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் கன்னத்தில் இருந்த கீறல் அவருடைய நகக்கீறல்  எனவும் காவல்துறையினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன..? தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்..? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Join our channel google news Youtube

உங்களுக்காக