கேங்ஸ்டராக கலக்கிய சிம்பு! “தொட்டி ஜெயா” படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

இயக்குனர் V. Z. துரை இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை கோபிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. இந்த திரைப்படத்தில் ஆர்.டி. ராஜசேகர், பிரதீப் ராவத், கொச்சின் ஹனீபா, சிலோன் மனோகர், லிண்டா ஆர்செனியோ, ஜி.எம். குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டர் லுக்கில் அசத்தலாக நடித்திருப்பார் என்றே கூறலாம். படத்தில் வரும் சண்டை காட்சிகள் மற்றும் சிம்புவின் லுக் அதைப்போல படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் அந்த சமயம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் சிம்பு நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சிம்பு இல்லயாம். முதலில் நடிக்கவிருந்தது ஜீவன் தான் நடிக்கவிருந்தாரம். திருட்டு பயலே, மச்சகாரன், தொட்டா, அதிபர் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர். இதன் காரணமாக, அவருக்கு தொட்டி ஜெயா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

படத்தின் கதையை இயக்குனர் V. Z. துரை ஜீவினிடம் கூறியது போல நடிகர் சிம்புவிடமும் கூறியிருந்தாராம். சிம்புக்கு இந்த திரைப்படத்தின் கதை மிகவும் பிடித்துப்போக நான் தான் இந்த திரைப்படத்தில் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம். பிறகு படத்தில் ஜீவன் நடிப்பதை விட சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு முடிவெடித்துவிட்டதாம்.  இந்த தகவலை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 சிம்பு நடிக்க படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதைப்போலவே, படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கோபிகாவுக்கு பதிலாக முதலில் நடிகை நயன்தாரா தான் நடிக்கவிருந்தாராம். பிறகு சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை இதன் பிறகு தான் படத்தில் நடிகை கோபிகா நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.