அன்பு காதலி அதிதிக்கு அழகான பிறந்த நாள் வாழ்த்து கூறிய சித்தார்த்! வைரலாகும் பதிவு!

நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார்.இவர்கள் இருவரும் காதலிப்பது கடந்த ஆண்டு உறுதியானது. கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்துகொண்டிருந்ததாக வதந்தியான தகவல் பரவி வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு அதிதி ரா பிறந்த நாளிற்கு இதயம் கொண்ட எமோஜிகளை வைத்து தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் இவர்கள் இருவரும் காதலிப்பது உறுதியானது. அதன் பிறகும் எதாவது நிகழ்ச்சி என்றாலோ அல்லது சுற்றுலா சென்றாலோ இருவரும் ஒன்றாக தான் சென்று கொண்டு வருகிறார்கள். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது. குறிப்பாக நேற்று கூட இருவரும் விமான நிலையத்தில் இருந்து வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

இந்த நிலையில், அதனை தொடர்ந்து தன்னுடைய அன்பு காதலி அதிதி ராவின் பிறந்த நாளை முன்னிட்டு சித்தார்த் மிகவும் அன்பாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதிதியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் மிகவும் உருக்கமாக தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” என்னுடைய அன்பு துணைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய சிறிய கனவுகள் மற்றும் பெரிய கனவுகள் எல்லாம் நிறைவேறவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். எப்போதும் உண்மையாக இருங்கள் ” என கூறியுள்ளார். இவருடைய பதிவை பார்த்த ரசிகர்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என கூறி வருகிறார்கள்.

மேலும், நடிகர் சித்தார்த் கடைசியாக சித்தா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆன நிலையில், அடுத்ததா அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.