சிறையில் தந்தை-மகன் உயிரிழப்பு ! நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு

சிறையில் தந்தை-மகன் உயிரிந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம‌ராஜா அறிவித்துள்ளார்.மேலும்  காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவர் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.