இப்போ இதுக்கு தான் குறைச்சல்! ஷிவானி நாராயணன் செய்த காரியத்தால் கோபத்தில் ரசிகர்கள்!

இப்போ இதுக்கு தான் குறைச்சல்! ஷிவானி நாராயணன் செய்த காரியத்தால் கோபத்தில் ரசிகர்கள்!

Shivani Narayanan

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சென்னையில் வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சிக்கி மக்கள் தத்தளித்து வரும் நிலையில். பிரபலங்கள் பலரும் தங்களுடைய உதவிகளை செய்து கொடுத்து வருகிறார். உதவி செய்து கொடுக்க முடியாத பிரபலங்கள் அனைவரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனவும் கேட்டு கொண்டு வருகிறார்.

ஆனால், இந்த சூழலிலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன் சென்னை புயலில் காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதன் நடுவே நின்று கொண்டு வழக்கம் போல ரீல்ஸ் செய்து அதற்கான விடியோவையும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டும் இருக்கிறார்.

அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி யாருடன் டேட்டிங் செய்தார் தெரியுமா?

இப்போது மட்டும் இல்லை எப்போதுமே நடிகை ஷிவானி நாராயணன் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கொட்டும் கனமழையில் மனசுக்குள் ஒரு புயல் பாடலுக்கு குட்டையான உடை அணிந்துகொண்டு ரீல்ஸ் செய்துள்ளார். அதற்கான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியீட்டு இருக்கும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். வீடியோவை பார்த்துவிட்டு பலரும் இந்த வீடியோவை உடனடியாக நீக்குங்கள் எனவும் இப்போ இதுக்கு தான் குறைச்சல் எனவும், மேலும் சிலர் இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலம் என்றும் கூறி வருகிறார்கள்.

மேலும், நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு அவருக்கு பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அதில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube