இந்த வருடத்தின் மூன்றாவது மொக்க படம் DUNKI.! ஷாருக்கான் கொடுத்த பதிலடி.!

இந்த வருடத்தின் மூன்றாவது மொக்க படம் DUNKI.! ஷாருக்கான் கொடுத்த பதிலடி.!

shahrukh khan

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘ ஜவான் ‘ மற்றும் ‘பதான் ‘ ஆகிய படங்கள் மக்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தை பெற்று 1,000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக  டன்கி  எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ராஜ்குமார் ஹிரானி என்பவர் இயக்கியுள்ளார்.

120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் படத்திற்கான டிரைலர் கடந்த 5-ஆம் தேதி வெளியானது.

ட்ரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.  படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.  அதன் ஒரு பகுதியாக இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷாருக்கான் பதில் அளித்தார்.

அட இது அதுல…ஸ்ரீதேவியின் 10 வருட பழமையான மாடர்ன் உடையில் மகள் ட்ரெண்டிங்.!

ஷாருக்கானிடம் ரசிகர்கள் பலரும் தங்களுடைய பல கேள்விகளை கேட்டு வந்தார்கள். அதில் முக்கியமாக ஒரு நெட்டிசன் ஒருவர் ” உங்களுடைய நடிப்பில் கடைசியாக வெளியான பதான், ஜவான் படங்கள் உங்களது மிகவும் திறமையான (PR குழுவின்) மக்கள் தொடர்பாளர்களை வைத்து தான் ஹிட் கொடுத்துவிட்டீர்கள் அதைப்போல தான் தற்போதும் டன்கி படமும் வெற்றிபெற்று அந்த மொக்க லிஸ்டில் இணையப்போகிறது” என்பது போல கூறியிருந்தார்.

Shah Rukh Khan
Shah Rukh Khan [File Image]
அதற்கு பதில் அளித்த நடிகர் ஷாருக்கான் ” பொதுவாக உங்களைப் போன்ற புத்திசாலிகளுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனால் உங்கள் விஷயத்தில் பதில் அளிக்க விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் மலச்சிக்கலுக்கு சிகிச்சை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு சில மருந்துகளை அனுப்ப எனது PR குழுவிடம் கூறுவேன்… விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Join our channel google news Youtube