கதிரமங்கலதிற்கு ஆதரவாக போராட்டத்தில் மாணவர்கள்…..!

By

நாகை மாவட்டம்,நாகை புத்தூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவால் கடுமையாக பாதித்து கடும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.எனவே மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல்துறையை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி மக்களின் இயல்பு நிலையை உத்திரவாதப்படுத்த வேண்டும்.கைது செய்யப்பட்டவர்களை வெளியிட வேண்டும் என்ற போராட்டத்தில் மாவட்டச்செயலாளர் ப.மாரியப்பன் தலைமை வகித்தார்,பங்கேற்ப்பு மாவட்டத்தலைவர் மு.ஜோதிபாஸ்,மாவட்ட துணை தலைவர் அ.ஸ்ரீதரன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பீ.விஜயேந்திரன், ஸ்டாலின் மற்றும் ரமணி ஆகியோர் உரையாற்றினார்கள். 800 ம் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு பின்னர் கலைந்து சென்றனர்.

Dinasuvadu Media @2023