கொரோனா அச்சுறுத்தலால் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறிய கவர்ச்சி நடிகை

கொரோனா அச்சுறுத்தலால் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறிய கவர்ச்சி நடிகை

Default Image

கொரோனா அச்சுறுத்தலால் குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.

சினிமா திரையுலகில் கவர்ச்சிக்கு பெயர் போனவர் நடிகை சன்னி லியோன். இவர் இந்தியாவில் கொரோனா வைரஸின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், குழந்தைகளுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.  இதனை சன்னி லியோன் தனது இணையா பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

நடிகை சன்னி லியோன், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது கார்டனில் உள்ள வீட்டில் தற்போது குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், கண்ணுக்கு தெரியாத வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதுவே சரியான இடம் என்றும், தனது தாயார் இப்போது இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சன்னி லியோன் எப்படி மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதற்க்கு பதிலளித்த சன்னி லியோனின் கணவர், அரசின் KLN விமானத்தில்தான் மும்பையில் இருந்து அமெரிக்க வந்ததாக கூறியுள்ளார். 

Join our channel google news Youtube