“பூவே பூச்சூடவா” சீரியல் நடிகை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. !

“பூவே பூச்சூடவா” சீரியல் நடிகை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி. !

Default Image

சின்னத்திரை நடிகை கௌசல்யா செந்தாமரை மூச்சுத்திணறல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகையான கௌசல்யா செந்தாமரை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் கௌசல்யா செந்தாமரை.

74 வயதான இவருக்கு மூச்சு திணறல் பிரச்சினை ஏற்பட்டதாகவும் , உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.தற்போது இவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாகவும் ,எனவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.இது சின்னத்திரை நடிகர், நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Join our channel google news Youtube