பிக்பாஸ் வீட்டில் பிரிக்கப்பட்ட காதல் ஜோடிகள்! சீரியலில் கணவன் மனைவியாக அவதாரம்!

பிக்பாஸ் வீட்டில் பிரிக்கப்பட்ட காதல் ஜோடிகள்! சீரியலில் கணவன் மனைவியாக அவதாரம்!

Default Image

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், கவின் மற்றும் லொஸ்லியாவிற்கு இடையே காதல் ஏற்பட்டது.
இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லொஸ்லியா தந்தை இவர்கள் இருவரின் காதலுக்கு இடையே சிறிய பிளவை ஏற்படுத்தி விட்டு சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக லொஸ்லியா ராஜாராணி சீரியலில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த சீரியலின் இரண்டாவது பாகம் எடுக்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிற நிலையில், இந்த சீரியலில் கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் கணவன் மனைவியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Join our channel google news Youtube