78 வயதான மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

78 வயதான மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளில் வெளிவந்த பிரபல படங்களுக்கு இசையமைத்த மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் தனது 78 ஆவது வயதில் இன்று (மே 22) நாக்பூரில் உயிரிழந்தார். 

பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (மே 22) நாக்பூரில் 78 வயதான ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் காலமானார். ராம் லக்ஷ்மன் விஜய் பாட்டீலில் பிறந்தார். இவரை தாதா கோண்ட்கே திரைப்பட துறையில் அறிமுகப்படுத்தினார். அதனால் தாதா கோண்ட்கேவுக்காக  ஆரம்பத்தில் இவர் மராத்தி பாடல்களுக்கு இசையமைத்தார். பின்னர் இந்தி பாடல்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.

மேலும், ராம் லக்ஷ்மன் 1989 யில் சல்மான் கான் படமான மைனே பியர் கியா என்ற படத்தில் அமைத்த இசையின் மூலம் பெரும் புகழ் பெற்றார். இவர் ஹம் ஆப்கே ஹைன் கவுன் என்ற படத்திற்கும்  இசையமைத்துள்ளார். மேலும், ராஜ்ஸ்ரீ ப்ரோடுக்சனுடன் இணைந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றார். ராம் லக்ஷ்மன் இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube