14 நாட்கள் கழித்து ‘ரோவர்’ நிலை என்ன.! இஸ்ரோவின் பிளான் B சுவாரஸ்யம்!

chandrayaan

14 நாட்கள் கழித்து ‘ரோவர்’ நிலை என்ன ஆகும் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3 விண்கலம். 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கிய புகைப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது.

ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ரோவரின் ஆய்வு

1.சந்திரயான்-3 திட்டப்படி, ரோவரின் பணியானது நிலவின் தென் துருவப் பகுதியில், அதன்  மேற்பரப்பை ஆய்வு செய்வதும், தரம் மற்றும் அளவு அடிப்படை பகுப்பாய்வு, நிலவின் மேற்பரப்பில் இருக்கும் வேதி கலவைகள் அவை உருவாவதற்கானற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்யும்.

2.நிலவில் தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள, மண் மற்றும் பாறைகளில் அடிப்படை கலவைகளை, அதாவது மெக்னீசியம், அலுமினியம், சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம் மற்றும் இரும்பு உள்ளிட்டவற்றின் மூலக்கூறுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.

லேண்டரின் ஆய்வு

1.சந்திரயான்-3 திட்டப்படி, ரோவரின் பணியானது நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள அணுக்களில் இருக்கும் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களின் மாற்றங்களையும், அருகிலுள்ள மேற்பரப்பு பிளாஸ்மாவில் உள்ள அடர்த்தி மற்றும் காலப்போக்கில் அதன் மாற்றங்களையும் நேரத்தை பொறுத்து அளவிடுகிறது.

2.துருவப் பகுதிக்கு அருகில் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாறுபாடுகள், வெப்பப் பண்புகளின் அளவீடுகளை மேற்கொள்கிறது.

3.நிலவில் தரையிறங்கும் இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் ஏற்படும் நில அதிர்வுகள், நில விரிசல்கள், மேடுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து கட்டமைப்பை வரையறுப்பதற்கும், அதனை அளவீடுகளை மேற்கொள்ளும்.

14 நாட்களுக்குப் பிறகு ரோவரின் நிலை என்ன?

ரோவர் ஒவ்வொரு நாளும் சுமார் 1/2 கி.மீ தூரம் மட்டுமே நிலபரப்பில் ஊர்ந்து செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படி ஊர்ந்து செல்லும்பொழுது, ரோவரில் பொறுத்தப்பட்டுள்ள கேமரா மூலம், நிலவில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நகர்வும்பி படம் பிடிக்கப்படும். மேலும், ரோவர் சேகரிக்கும் தகவல்களை விக்ரம் லேண்டர், இஸ்ரோ ஆய்வகத்திற்கு அனுப்பும்.

சூரியன் வந்த பிறகு நிலவில், தரையிறங்கிய ரோவரானது சூரிய சக்தி கொண்டு இயங்கப்படுகிறது. இந்நிலையில், நிலவில் சூரிய ஒளி கிடைக்கும் 14 நாட்களும் ஆய்வு மேற்கொண்டு தனது பணியை நிறைவு செய்யும். இந்த 14 நாட்கள் கழித்து லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் பூமிக்கு வராது, அவை நிலவிலேயே நிலைத்திருக்கும், அதன் பின் செயலிழந்துவிடும்.

இஸ்ரோவின் பிளான் B

14 நாட்களுக்குப் பிறகு, நிலவில் இரவு வந்துவிடும் அப்பொழுது அங்கு கடுமையான குளிர் காலநிலை ஏற்படும். சந்திரயான்-3யின் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரானது வெயிலில் மட்டுமே வேலை செய்ய முடியும் என்பதால், அவை 14 நாட்களுக்குப் பிறகு செயலிழந்துவிடும்.

ஆனால், அந்த 14 நாட்கள் நிலவில் பயணித்து கொண்டிருக்கும் வேலையில் தனது பேட்டரியில் சார்ஜ் செய்து வைத்துவிட்டு 14 நாட்களுக்குப் பிறகு செயலிழந்துவிடும். ஒருவேளை மீண்டும் நிலவில் சூரியன் வரும்பொழுது, லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் உயிர் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என கூறப்படுகிறது. அப்படி அது சாத்தியமானால், அது இந்தியாவுக்கு சந்திரயான்-3யின் நிலவு பயணத்திற்கான போனஸாக அமையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்