வாங்க ! நிலாவை பார்க்கலாம் சந்திரயான்-3 அனுப்பிய வீடியோ
சந்திரயான்-3 விண்கலம்,நேற்று நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழந்தபோது எடுக்கப்பட்டு வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையைப் படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. அதன்படி, சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.
நேற்று சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது.பெரிலூனில் ஒரு ரெட்ரோ எரிப்பு மிஷன் ஆபரேஷன் காம்ப்ளக்ஸ் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் ,அடுத்த செயல்பாடாக சுற்றுப்பாதையின் குறைப்பு இன்று ( ஆகஸ்ட் 6) இல் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட சுற்றுப்பாதை குறைப்பு சூழ்ச்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதாகவும், என்ஜின்களின் மறுசுழற்சி அதை சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்தது, இப்போது 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுற்றுப்பாதையை மேலும் குறைப்பதற்கான அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 9, 2023 அன்று 13:00 முதல் 14:00 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் போது எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ சந்திரயான்-3 க்கான டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அதில் நிலையின் கரடுமுரடான தோற்றம் தெளிவாக தெரிகிறது.
The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, 2023.#ISRO pic.twitter.com/xQtVyLTu0c
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 6, 2023
நிலவை சுற்றி வந்த பின் ஆக.23ல் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்குகிறது.