அறிவியல்

இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன்… நாளை வானில் நிகழும் அதிசய அறுவடை நிலவு!!

Published by
கெளதம்

இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன் என்று அழைக்கப்படும் ‘அறுவடை நிலவு’ (harvest moon) இன்றும், நாளையும் (செப்.29, வெள்ளிக்கிழமை) தெரிகிறது. இந்த சூப்பர் முன் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் அறுவடை நிலவு என்று அழைக்கப்படுகிறது.

சூப்பர் மூன் (முழு நிலவு)

அதாவது, நிலவானது பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இதனால், நிலவு ஒரு புள்ளியில் பூமிக்கு அருகிலும், மற்றோறு புள்ளியில் தூரத்திலுலும் சுற்றி வரும். அப்போது, பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது, முழுநிலவாக உருவெடுக்கும் இந்த நிகழ்வு தான் சூப்பர் மூன் என்று கூறப்படுகிறது. இந்த ஒரு சூப்பர் மூன் மற்ற நேரங்களை விட, சற்று 14% பெரியதாகவும், 30% பிரகாசமாகவும் தோன்றும் என கூறப்படுகிறது.

சூப்பர் மூன் என்பது ஒரு வகையான முழு நிலவு என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், நிலவு பூமியிலிருந்து சுமார் 363,104 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். சூப்பர் மூன்கள் பெரும்பாலும் வானியல் நிகழ்வுகளாகக்  ரசிக்கப்படுகின்றன.

எங்கெல்லாம் தெரியும்

ஒவ்வொரு ஆண்டும் பொதுவாக மூன்று அல்லது நான்கு சூப்பர் மூன்கள் தோன்றுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் நான்கு சூப்பர் மூன்கள் தோன்றியது. இந்த ஆண்டில் நிகழ்ந்த 3 சூப்பர் மூன்கள் இந்தியாவில் தெரிந்தது. நாளை தோன்றும் 4வது சூப்பர் முன் (அறுவடை நிலவு) இந்தியாவில் தெரியாது. இந்த முழு நிலவு (அறுவடை நிலவு) வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து பார்க்க முடியும்.

அறுவடை நிலவு எப்போது தோன்றும்

இந்த ஆண்டு, அறுவடை நிலவு இன்று (செப். 28) வியாழன் அன்று சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு தோன்றும். மேலும், நாளை (செப். 29 ) வெள்ளிக்கிழமை காலை 5:57 ET (09:57 GMT) மணிக்கு முழு நிலவாக தெரியும்.

அறுவடை நிலவு (harvest moon)

இலையுதிர் காலத்தின் போது, தோன்றும் இந்த நிலவு முழு நிலவு, பூமியிலிருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள கோணம் 180 டிகிரிக்கு சமமாக இருக்கும் போது ஏற்படுகிறது.  மேலும், இந்த அறுவடை நிலவு ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் தெரியும்.

இது இலையுதிர் காலம் தொடக்கத்தைக் குறிப்பதோடு, பயிர்கள் அறுவடை செய்யும் காலமாகும். முந்தைய காலகட்டத்தில், இலையுதிர் காலத்தில் முழு நிலவின்போது, அறுவடை நாளாக கொண்டாடப் பட்டுள்ளது.

அதாவது, இந்த சூப்பர் மூன், விவசாயிகள் கோடையில் பயிரிடப்பட்ட தங்கள் பயிர்களை அறுவடை செய்யும் பொழுது, மாலை நேரங்களில் கூடுதல் நிலவொளியைக் கொடுத்து உதவுகிறது. எனவே, இது அறுவடை நிலவு என்று அழைக்கப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

வரிப்பகிர்வு குறைவதால் மாநில அரசுக்கு சுமை ஏற்படுகிறது – மு.க.ஸ்டாலின் உரை!!

சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…

15 mins ago

வார தொடக்க நாளில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…

46 mins ago

பயணிகள் கவனத்திற்கு! பேருந்து முன்பதிவு செய்யும் நடைமுறை மாற்றம்!

சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…

1 hour ago

ராயன் வசூலை நெருங்கும் கங்குவா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…

2 hours ago

இன்று ஜி20 மாநாடு..! பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…

2 hours ago

Live : மணிப்பூர் கலவரம் முதல்…பிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடி வரை…!

சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…

3 hours ago