அட இதை கவனித்தீர்களா? இறுதி நிமிடத்தில் சுதாரித்த லேண்டர்! என்ன நடந்தது?
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் பாய்ந்தது. 40 நாள் பயணத்தை மேற்கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
தற்போது, விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கிவிட்டது. ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இதற்கிடையில், லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவதற்கு இறுதி நிடங்களில் எப்படி சரியாக தரையிறங்கியது என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. சந்திரயான்-2 தோல்விகளை மனதில் வைத்து ஒவ்வொன்றையும் சரியாக பார்த்து செய்துள்ள இஸ்ரோ நிறுவனம் சந்திரயான்- 3யில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெற்றி கோடியை நாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவில் கால் பாதித்த இறுதி நிமிடங்கள்:
25 கி.மீ குறைந்த சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்த லேண்டர், ஆகஸ்ட் 23 அன்று மாலை 5.30 மணி அளவில் நிலவின் தென் பகுதியில், அதன் உந்துவிசை கலன்கள் இயக்கப்பட்டு கிடைமட்டமாக சென்ற லேண்டர் பகுதி, நேர் கீழாக பயணிக்க தொடங்குகியது. 7.5 கீ.மீ இருந் லேண்டர் மணிக்கு 6000 கி.மீ வேகத்தில் வந்த நிலையில், அது மணிக்கு 1200 கி.மீ வேகமாக குறைக்கப்பட்டது.
இந்த மொத்த நிகழும் நிகழ்வதற்கு 10 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது. கடைசி 15 நிமிடங்களில் முதல் கட்டம் மட்டுமே 10 நிமிடங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 7.4 கி.மீ உயரத்தில் இருந்து 6.8 கி.மீ உயரத்திற்கு குறைத்து, லேண்டரானது நிலவின் மேற்பரப்பில் தரையிறங்குவது போன்று அதன் கால்கள் கீழ்நோக்கி இறக்கப்பட்டு, அதன் கோலம் 50 டிகிரி சாய்வாக மாற்றப்பட்டது.
இதனையடுத்து, 6.4 கி.மீ உயரத்தில் இருந்து 800 மீ உயரம் குறைக்கப்பட்டு, 50 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் 90 டிகிரி கோணத்தில் செங்குத்தாக இறங்கும் வகையில் அதன் கோணம் மாற்றப்பட்டது. அதாவது, 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு குறைப்பட்டு, லேண்டரானது 22 நொடிகள் அப்புடியே அந்தரத்தில் நிற்க வைக்கப்பட்டது.
இந்த கட்டத்தில் லேண்டரின் உள்ள அனைத்து இயந்திரங்களும் செயல்பட்டு, உந்துவிசை கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் தான் லேண்டரில் உள்ள கேமராக்கள் (LHDAC) மற்றும் சென்சார்கள் செயல்பட தொடங்கி நிலவின் சமதள பக்கத்தை கண்டறிய தொடங்கியது.
அப்பொழுது, 150 மீட்டர் உயரத்தில் இருக்கும்பொழுது, ஒரு இடத்தில இறங்க தயராக இருக்கும்பொழுது, லேண்டர் அபாயக் கண்டறிதல் மாற்றம் கேமராக்கள் வேலை செய்ததன் மூலம், தான் இறங்கும் இடத்தில் பள்ளம் அல்லது பாறைகள் இருப்பதை அறிந்துள்ளது. இதனை தொடர்ந்து, ‘RE – TARGET’ மூலம் அதிலிருந்து சற்று நகர்ந்து, சமதளமான இடத்தில் இறங்க வேண்டுமென முடிவு செய்து, இதனைத்தொடர்ந்து லேண்டரானது, 150 மீட்டர் உயரத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்துக்கு தரை இறங்க தொடங்கியது.
இவ்வாறு, ஒவ்வொரு நகர்வையும் கவனித்து வந்த அதிநவீன சாதனங்கள் மூலம் வெற்றிகரமாக சந்திரயான்-3 நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. சந்திரயான்-3 திட்டப்படி, ரோவரின் பணியானது நிலவின் தென் துருவப் பகுதியில், அதன் மேற்பரப்பை ஆய்வு செய்ய ரோவர் ஒவ்வொரு நாளும் சுமார் 1/2 கி.மீ தூரம் மட்டுமே நிலபரப்பில் ஊர்ந்து செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.