இன்று விண்ணில் பாய்கிறது ‘GSLV F12’ ராக்கெட்.!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.42 மணிக்கு  “ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12” என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தகவல் தெரிவித்துள்ளது.

ISRO GSLV-F12
ISRO GSLV-F12 [Image source : Twitter/@airnewsalerts]

அதாவது, இந்த ராக்கெட் ஆனது என்.வி.எஸ்.-01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது. புவிநிலைச் சுற்றிப் பாதையில் 36,000 கி.மீ உயரத்தில் இதனை நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

 

ஏற்கனவே, ஜிஎஸ்எல்வி ஏபி12 ராக்கெட் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. இந்நிலையில், 2,232 கிலோ எடை கொண்ட NAVIK-01 செயற்கைக்கோள் 26 மணி நேர கவுன்ட் டவுனுக்குப் பிறகு, இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவ தயாராக உள்ளது.

GSLV-F12
GSLV-F12 [Image source : Twitter/@airnewsalerts]

ராக்கெட்டின் ஒவ்வொரு நிலைக்கான இறுதிக்கட்ட சோதனை முடிந்ததும், ஏவுகணை அங்கீகார வாரியம் (LAB) ஏவுதல் பணியை இஸ்ரோவிடம் ஒப்படைக்கும். வெளியீட்டு அங்கீகார வாரியம் ஆர்முகம் ராஜராஜன் தலைமையில் ஆய்வக கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்