பூமியை நோக்கி வரும் பெரிய ஆபத்து.. நாசா சொல்வது என்ன?

NASA

நாசா கண்டுபிடிப்பு: அபாயகரமான அச்சுறுத்தலுக்கு மத்தியில் பூமியின் திறனைப் புரிந்துகொள்வதற்காக நாசா ஒரு கற்பனையான பயிற்சியை மேற்கொண்டது. அதில், வரும் 2038 ஆண்டு 12 ஜூலை அன்று 14.25 நேரத்தில்  பூமி மீது சக்திவாய்ந்த குறுங்கோள் மோத 72% வாய்ப்பு இருப்பதாக நாசா மேற்கொண்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

இது மிகப்பெரிய இயற்கை பேரிடராக இருக்கும் எனவும் இதை தடுக்கும் அளவுக்கு நாம் இன்னும் தயாராகவில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது. அதாவது, நாசா ஐந்து அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிளானட்டரி டிஃபென்ஸ் இன்டராஜென்சி டேப்லெட் டாப் என்கிற பயிற்சியை நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் நடத்தியது.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மேரிலாந்தின் லாரலில் உள்ள Johns Hopkins Applied Physics Laboratory (APL) நடைபெற்ற இந்த பயிற்சியானது NASA ஆல் கடந்த ஜூன் 20 அன்று வெளியிடப்பட்டது. இந்த பயிற்சியில் நாசாவைத் தவிர, சுமார் நூறு அமெரிக்க அரசாங்கத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் சிறுகோளின் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றாலும், ஒரு சிறுகோள் அபாயகரமானதாக மாறினால் பூமி எவ்வளவு நன்றாக செயல்படும் என்பதை அறிய இந்த பயிற்சி நடத்தப்பட்டது.  அந்த பயிற்சியில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள் சுமார், 14 ஆண்டுகளில் பூமியைத் தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2038 ஆண்டு 12 ஜூலை 14.25 நேரம் அன்று பூமி தாக்கம்

இருப்பினும், அந்த சிறுகோளின் அளவு, கலவை மற்றும் நீண்ட கால போக்கை துல்லியமாக கண்டறிய பயிற்சியின் போதுமான தகவல் ஏதும் இல்லை. மேலும் இந்த சிறுகோள் தாக்குதலில் இருந்து பூமியைக் காப்பாற்றும் திறன் நம்மிடம் இப்போது இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்