Asteroid 2024 KJ[file image]
நாசா: இன்று அசுர வேகத்தில் ஒரு சிறுகோள் ஒன்று பூமிக்கு மிக அருகாமையில், அதாவது 32,70,000 மைல் தொலைவில் கடந்து செல்ல இருப்பதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இந்த சிறுகோளின் அளவு 77 அடி என்றும். மணிக்கு 10094 கீ/மீ என்ற அசுரர் வேகத்திற்கு பயணிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோளுக்கு Asteroid 2024 KJ என பெயர் வைத்துள்ளனர்.
அதாவது ஒரு விமானத்தின் அளவிற்கு இந்த சிறுகோள் அளவு இருக்கலாம் என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் தெரிவித்திருக்கிறது. மேலும், அருகில் நெருங்கி கடக்கும் இந்த சிறுகோளால் எந்த ஒரு ஆபத்தும் பூமிக்கு இல்லை என நாசா தெரிவித்துள்ளது.
அதாவது,முதலில் பூமியை நோக்கி வந்த இந்த சிறுகோள் அதன்பின் அதனது போக்கை மாற்றி தற்போது 32,70,000 மைல் தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.
இருப்பினும், இந்த சிறுகோள்கள், கிரகங்கள் போன்ற பெரிய பொருட்கள் எல்லாம் பூமியை கடக்கும் போதெல்லாம், அவற்றின் ஈர்ப்பின் தாக்கம் மூலம் விமானப் பாதையை சற்று மாற்றியமைக்கலாம் என்று கூறுகின்றனர்.
இதனாலே நம் பூமியை நோக்கி விழும் எந்த ஒரு சிறு கோளையும், விண்கற்களையும் நாசா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…