77 அடி ..10094 கிமீ வேகம் ..பூமிக்கு அருகில் செல்லும் சிறுகோள் !! பூமிக்கு ஆபத்தா?

Asteroid 2024 KJ

நாசா: இன்று அசுர வேகத்தில் ஒரு சிறுகோள் ஒன்று பூமிக்கு மிக அருகாமையில், அதாவது 32,70,000 மைல் தொலைவில் கடந்து செல்ல இருப்பதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

இந்த சிறுகோளின் அளவு 77 அடி என்றும். மணிக்கு 10094 கீ/மீ என்ற அசுரர் வேகத்திற்கு பயணிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோளுக்கு Asteroid 2024 KJ என பெயர் வைத்துள்ளனர்.

அதாவது ஒரு விமானத்தின் அளவிற்கு இந்த சிறுகோள் அளவு இருக்கலாம் என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் தெரிவித்திருக்கிறது. மேலும், அருகில் நெருங்கி கடக்கும் இந்த சிறுகோளால் எந்த ஒரு ஆபத்தும் பூமிக்கு இல்லை என நாசா தெரிவித்துள்ளது.

அதாவது,முதலில் பூமியை நோக்கி வந்த இந்த சிறுகோள் அதன்பின் அதனது போக்கை மாற்றி தற்போது 32,70,000 மைல் தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.

இருப்பினும், இந்த சிறுகோள்கள், கிரகங்கள் போன்ற பெரிய பொருட்கள் எல்லாம் பூமியை கடக்கும் போதெல்லாம், அவற்றின் ஈர்ப்பின் தாக்கம் மூலம் விமானப் பாதையை சற்று  மாற்றியமைக்கலாம் என்று கூறுகின்றனர்.

இதனாலே நம் பூமியை நோக்கி விழும் எந்த ஒரு சிறு கோளையும், விண்கற்களையும் நாசா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy
Dragon Movie Budget
ADMK Chief secretary Edappadi Palanisamy - Madras High court