அறிவியல்

சாதனை படைத்த இந்தியா..! விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் நன்றி..!

Published by
செந்தில்குமார்

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென்துருவத்தை ஆராய, ரூ.615 கோடி செலவில் விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி, நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு மற்றும் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியை தனியாக பிரிப்பது என பல கட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

தற்போது நிலவை சுற்றி வந்த சந்திரயான்-3 விண்கலம், சற்று முன் (6.04 மணி) நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த  இந்தியா பெற்றுள்ளது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், “சந்திரயான்-3 பணியின் வெற்றிக்காக பின்னணியில் உள்ள தனது குழுவினருக்கு நன்றி” என்று கூறினார். சந்திரயான்-3 திட்டத்தை வெற்றியடைய செய்த வீர முத்துவேலுக்கு தனது பாராட்டை தெரிவித்த சோம்நாத், “சந்திரயான் 1ல் தொடங்கிய பயணம் சந்திரயான் 2-ஐ கடந்து இப்போது இந்த இடத்தில் நிற்கிறோம். சந்திரயான் 2 மூலம் இன்னும் தகவல் தொடர்பு இருக்கிறது. இந்த பணியில் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

21 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

9 mins ago

மருத்துவமனைகளில் 24/7 பாதுகாப்பு… வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…

12 mins ago

225 தொகுதிகளை கொண்ட இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் தொடக்கம்.!

இலங்கை : இலங்கையின் 17-வது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 7 மாணிக்கு தொடங்கியது. இன்று மாலை 4 வரை…

2 hours ago

காலை 10 மணி வரை சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

சென்னை : சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக…

2 hours ago

மருத்துவர் மீதான தாக்குதல்: இன்று (நவ. 14) யார் வேலைநிறுத்தம்? யார் வாபஸ்?

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை…

2 hours ago

SA vs IND : பவுலர்களைப் பந்தாடிய திலக் வர்மா! தொடரில் முன்னிலைப் பெற்று இந்திய அணி அபாரம்!

செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியானது இன்று செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…

9 hours ago