சிங்கப்பூரின் DS-SAR உட்பட 7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக்கோள் ,10 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மூன்று நானோ செயற்கைக்கோள்கள் உட்பட ஆறு இணை செயற்கைக்கோள்கள் இன்று (ஜூலை 30) காலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
360 கிலோ எடை கொண்ட DS-SAR செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
DS-SAR செயற்கைக்கோள் சிங்கப்பூர் அரசின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ST இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
இது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) உருவாக்கிய SAR பேலோடைக் கொண்டுள்ளது, இது அனைத்து வானிலை பற்றிய தகவல்களை துல்லியமாக 1m-தெளிவுத்திறனில்(resolution) படங்களை வெளியிடும் திறன் கொண்டது.
PSLV-C56 சரியான சுற்றுப்பாதையில் DS-SAR மற்றும் 6 இணை செயற்கைக்கோள்கள் உட்பட ஏழு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது ” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…