பிரக்யன் ஒரு குழந்தை, அவர் சந்திரனில் குழந்தை அடி எடுத்து வைக்கிறார்.! பிரக்யான் ரோவர் விஞ்ஞானி..!
பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு சந்திரயான்-3 மிஷன் குறித்து விளக்கியுள்ளார். பின் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் திட்ட இயக்குனர் வீர முத்துவேல் சந்திராயன்-3 எடுத்த புகைப்படங்களை பரிசாக வழங்கினர். அதன்பின் தொடர்ந்து பேசிய அவர், நிலவில் சந்திராயன் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவ சக்தி’ என பெயரிட்டு அழைக்கப்பட உள்ளது.
சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு ‘திரங்கா’ (மூவர்ணக்கொடி) என பெயரிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வருகை குறித்து கூறிய பிரக்யான் ரோவரின் விஞ்ஞானியும் குழு உறுப்பினருமான ரீமா கோஷ், “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பிரதமரின் வருகை அருமையாக இருந்தது. அவர் எங்களின் அனைத்து முயற்சிகளையும் பாராட்டினார். நான் பிரக்யான் குழுவில் இருந்தேன். பிரக்யன் ஒரு குழந்தையைப் போன்றவர். அவர் சந்திரனில் குழந்தை அடி எடுத்து வைக்கிறார்.”
“இது ஒரு அற்புதமான அனுபவம். சந்திரனில் ரோவர் முதன்முறையாக உருண்டு வருவதைப் பார்க்க, நமது முயற்சிகளையும், தியாகத்தையும் பாராட்ட நமது பிரதமர் இவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டார். இன்னும் சிறப்பான ஒன்றைக் கொண்டு வரப் போகிறோம். அவர் கூறியது போல் வானமே எல்லை அல்ல, நாங்கள் வருவோம்.”
மேலும், “சவாலான நிலையில் செவ்வாய் கிரகம் தரையிறங்கும் பணி, ஆதித்யா-எல்1 மிஷன் உள்ளிட்ட பல பணிகள் திட்டத்தில் உள்ளன. அவை விரைவில் தொடங்கப்படும்” என்று பிரக்யான் ரோவரின் விஞ்ஞானியும் குழு உறுப்பினருமான ரீமா கோஷ் கூறினார்.