அடுத்த 14 நாட்கள் நாடு பல ஆச்சரியங்களை காண காத்திருக்கிறது..! இஸ்ரோ தலைவர் சோம்நாத் நெகிழ்ச்சி..!

Somanath

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு  இந்தியா என்ற பெருமையை  பெற்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், சந்திரயான்-3 பணியின் வெற்றிக்கு தனது குழுவை வாழ்த்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. தோல்வியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டோம், இன்று வெற்றி பெற்றுள்ளோம். சந்திரயான்-3 இன் வெற்றி, மேலும் சவாலான எதிர்கால பயணங்களை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை அளிக்கிறது. டச் டவுனின் வேகம் உட்பட பெயரளவிலான பெரும்பாலான நிபந்தனைகளை எங்களால் அடைய முடிந்ததால், நாங்கள் மிகவும் மென்மையான தரையிறக்கத்தைப் பெற்றோம்.” என்று கூறினார்.

மேலும், “2 மணி நேரத்திற்கு பிறகு பிரக்யான் ரோவர் இயக்கப்படும்.லேண்டர் தரை இறங்கியதும் 2 மணி நேரத்திற்கு மணலால் ஏற்படும் புழுதியால் அப்பகுதி முழுவதும் மங்கலாக இருக்கும். லேண்டர் தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பிறகு, முக்கியமான நிகழ்வு நடைபெறும். அடுத்த 14 நாட்கள் தேசத்துக்கு உற்சாகத்தை தரக்கூடியது. இந்த நிகழ்வு மூலம் நாடு பல ஆச்சரியங்களை காண காத்திருக்கிறது” என்று சோம்நாத் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்