#First Photo Moon:நிலவில் தரையிறங்கிய பின்னர் சந்திரயான்-3 அனுப்பிய முதல் புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ
கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாகத் இன்று(ஆகஸ்ட் 23) தரையிறங்கியதன் மூலம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 லேண்டர் மாட்யூல் நிலவின் மேற்பரப்பைத் தொட்ட பிறகு எடுத்த முதல் படத்தைப் பகிர்ந்துள்ளது.
படத்தில் சந்திரயான்-3 தரையிறங்கிய தளத்தில் ஒரு காலுடன் மற்றும் அதன் நிழல் படத்தில் தெரிவதை காட்டுகிறது . “சந்திரயான்-3 நிலவின் மேற்பரப்பில் ஒப்பீட்டளவில் தட்டையான பகுதியைத் தேர்ந்தெடுத்தது” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Mission:
The image captured by the
Landing Imager Camera
after the landing.It shows a portion of Chandrayaan-3’s landing site. Seen also is a leg and its accompanying shadow.
Chandrayaan-3 chose a relatively flat region on the lunar surface ????… pic.twitter.com/xi7RVz5UvW
— ISRO (@isro) August 23, 2023