வரலாற்று தருணம்! நாட்டிற்கு பெரிய சாதனை..இஸ்ரோக்கு வாழ்த்து தெரிவித்த அரவிந்த் கேஜ்ரிவால்!
கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள் முதல் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்வீட்டரில தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது ” இது சரித்திரம். இது நாட்டுக்கு மிகப்பெரிய சாதனை. இது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். சந்திரயான்-3 பாரத் மாதா கி ஜெய் வெற்றியீட்டிய அனைத்து நாட்டு மக்கள், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் இஸ்ரோவின் பணியாளர்களுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
ये ऐतिहासिक है। देश के लिए बड़ी उपलब्धि है। हम सबके लिए गर्व की बात है। चंद्रयान-3 की सफलता के लिए सभी देशवासियों, ISRO के वैज्ञानिकों, इंजीनियर और कर्मचारियों को बहुत-बहुत बधाई।
भारत माता की जय ???????? https://t.co/kWLztpBDiB
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 23, 2023