சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழந்தது. இதனைத்தொடர்ந்து விண்கலத்தின் திட்டமிடப்பட்ட முதற்கட்ட சுற்றுப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட பணி நடைபெற இருக்கிறது.
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
சந்திராயன்-3 விண்கலமானது பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர ஆரம்பித்த நிலையில், நிலவின் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் திட்டமிட்ட சுற்றுப்பாதை குறைப்பு வெற்றிகரமாக மேற்கொண்டது. என்ஜின்களின் மறுசுழற்சி அதை சந்திரனின் மேற்பரப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்தது, தேதி 170 கிமீ x 4313 கிமீ. தொலைவில் கொண்டு வரப்பட்டது.
தற்போது, சுற்றுப்பாதையை இரண்டாம் கட்ட குறைப்பதற்கான அடுத்த செயல்பாடு இன்று மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில், சந்திரயான்-3 விண்கலமானது நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழையும் போது எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது.
நிலவை சுற்றி வந்த பின் ஆக.23ல் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்குகிறது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…