நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சந்திரயான்-3..! இஸ்ரோவுக்கு நாசா நிர்வாகி பில் வாழ்த்து..!
கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனையடுத்து அரசியல் தலைவர்கள் முதல் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நாசா நிர்வாகி பில் அவரது எக்ஸ் பக்கத்தில் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், சந்திரயான்-3 சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்! மேலும் நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதற்கு வாழ்த்துகள். இந்த பணியில் உங்களின் கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று நாசா நிர்வாகி பில் தெரிவித்துள்ளார்.
Congratulations @isro on your successful Chandrayaan-3 lunar South Pole landing! And congratulations to #India on being the 4th country to successfully soft-land a spacecraft on the Moon. We’re glad to be your partner on this mission! https://t.co/UJArS7gsTv
— Bill Nelson (@SenBillNelson) August 23, 2023